ஊழியர்களுக்கு கவுரவம் தரும் ஈசாப் பங்கு
“ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களுக்கு, அவர்களின் நீண்ட நாள் சேவையின் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் பங்குகளை, விலை இல்லாமலோ, சந்தை விலையைவிட குறைவான விலைக்கோ நிர்வாகமானது தங்களின் ஊழியர்களுக்குத் தருவதே ‘ஈசாப்’ ஆகும்.
பொதுவாக, ஐ.டி துறையில் பெரும்பாலான நிறுவனங்கள் அவர்கள் ஊழியர்களை கௌரவிக் கும் வகையிலும், அவர்களை நிறுவனத்தில் தக்கவைப்பதற்காகவும் ‘ஈசாப்’ முறையில் பங்குகளை வழங்குகிறது.
‘ஈசாப்’ முறையில் தரப் படும் பங்குகளுக்கு வழங்கப்பட்ட நாளில் இருந்து சில வருடங்களுக்கு விற்கத் தடை இருக்கும்.”