பத்திரம் எழுதித் தந்தால் நம்பலாமா?
எந்த ஒரு நிறுவனமும் மக்களிடம் வாங்கும் பணத்துக்கு சான்றாக பத்திரம் எழுதித் தந்தால், அதை நம்பாதீர்கள். மக்கள் தரும் பணத்துக்கு 20 ரூபாய் பத்திரத்தில் எழுதித் தந்தால், அது உத்தரவாதமான ஆவணமாக மக்கள் நினைக்கிறார்கள்.
எந்தப் பத்திரமாக இருந்தாலும், அதைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். அதற்கு எத்தனை லட்சம் பணம் கட்டுகிறீர்களோ, அதற்கேற்ப பத்திரம் வாங்க வேண்டும்.
இதை எல்லாம் செய்யாமல் வெறும் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதித் தரும் வாசகங்களை வைத்து நம் பணம் நிச்சயமாகத் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.