வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களை குறிவைத்து…
வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்று கூறி, ‘ லிங்க் ‘ ஒன்றை பலரது செல்போனுக்கு அனுப்புவார்கள் . ஆர்வமாக இருப்பவர் களிடம் முதல் கட்டமாக குறைவான முன்பணம் கேட்பார்கள் .
பணம் செலுத்தியதும் எளிதான புராஜக்ட் ஒன்றை கொடுப்பார்கள் . அதை செய்து முடித்ததும், 2 மடங்காக பணத்தை சம்பந்தப்பட்ட வங்கி கணக்குக்கு அனுப்புவார்கள்.
அடுத்தடுத்து இதேபோல இரட்டிப்பு பணம் அனுப்புவார்கள் . பின்னர் சில்வர், கோல்டு , பிளாட்டினம் என அடுத்தடுத்த நகர்வுகள் செல்லும் . இறுதியில் நமது ஆர்வத்தை பொருத்து ரூ .1 லட்சம் முதல் பல லட்சம் வரை கட்டச் சொல்வார்கள் . இரட்டிப்பாகும் ஆசையில் நம்பி , பணத்தை கட்டினால் , அதன் பிறகு , அந்த கும்பலை தொடர்பு கொள்ளவே முடியாது . இப்படி ஐ.டி. உட்பட பல துறைகளை சேர்ந்தவர்களும் கோடிக்கணக்கில் இழந்துள்ளனர் .