மாற்று சிந்தனையே.. மாற்றத்திற்கான தீர்வு..!
அமெரிக்க விமான நிலையத்தில், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகர்யம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், விமானத்திலிருந்து இறங்கி வந்த பின், லக்கேஜிற்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
புகாரை தொடர்ந்து லக்கேஜ் கிடைக்கும் நேரத்தை கால் மணி நேரத்திலிருந்து 8 நிமிடமாக குறைத்தனர். இதற்கென பெரும் பொருட்செலவில் நவீன யுக்தியை கையாண்டனர். பின்னர் மேற்கொண்ட ஆய்வின் போதும் அதே புகார் தொடர்ந்தது. என்ன செய்வது என்று சோதித்தவர்களுக்கு கிடைத்தது ஒரு புதிய ஐடியா. விமானத்திலிருந்து பயணிகள் லக்கேஜ் இருக்கும் பகுதிக்கு வரும் நேரத்தை அதிகப்படுத்தினர். அதாவது அவர்கள் நடைபாதை தூரத்தை அதிகப்படுத்தினர். அத்துடன் பாதையில் நிறைய கடைகளை அமைத்தனர். இப்போது பயணிகள் நீண்ட நடைபாதையில் நடந்து வருவதோடு கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு வருவதற்குள் லக்கேஜ் அதற்குரிய இடத்தில் முன்னதாகவே வந்து சேர்கிறது.
இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். லக்கேஜ் வரும் நேரத்தை குறைப்பதில் கவனம் செலுத்தாமல் பயணிகள் வரும் நேரத்தை அதிகப்படுத்தியது ஒரு மாற்று சிந்தனை. இந்த மாற்று சிந்தனை பயணிகளின் புகாருக்கு தீர்வை தந்ததோடு புதிதாக ஏற்படுத்திய கடைகள் மூலம் விமானநிலையத்திற்கும் லாபம் தந்தது.ஒரு பிரச்சனைக்கான தீர்வை ஒரே நேர்கோட்டில் பார்க்காமல் சற்று மாறுதலுடன் அணுகுவது சரியான, தெளிவான தீர்வை தரும்.