இன்னும் ஏன் தயக்கம்…?
வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றி அமைக்கும் முடிவுகளை எடுக்கத் தயங்குகிறீர்களா? பின்வரும் கேள்விகளை நீங்களே உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
‘நீங்கள் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு எப்படி வந்தீர்கள், இப்போதுள்ள இந்த நிலைக்கு நீங்கள் வர முடிவெடுத்தபோது, உங்கள் கை, கால்கள் நடுங்கி இருக்குமே, நெஞ்சு படபடத்து, உள்ளங்கை வேர்த்திருக்குமே! அப்போதெல்லாம் துணிந்து முடிவெடுத்த நீங்கள், இப்போது ஏன் எடுக்கத் தயங்குகிறீர்கள், அப்போதெல்லாம் முடிவெடுத்து காரியத்தில் இறங்கி ஜெயித்தீர்களே, இப்போது ஏன் தயக்கம் என கேளுங்கள்.