நிதி இலக்கு வெற்றி பெற!
சீரான முதலீடுசீரான முதலீடு என்பது நீண்ட காலத்தில் செல்வமாக மாற முக்கிய காரணியாக உள்ளது. நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு குறுகிய காலம், நடுத்தரக் காலம் மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை அடைய என்பது பதிலாக இருக்கும்.
முதலீடு என்பது ஒரே ஒரு பணப் பரிவர்த்தனையின் மூலம் வருமானம் பெறுவதல்ல; சீராக, குறிப்பிட்ட கால இடைவெளியில் பல பணப் பரிவர்த்தனை களின் மூலம் முதலீடு செய்து வருமானத்தை ஈட்டுவதாகும்.
அப்படி சீராகத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் மட்டுமே, அனைத்து நிதி இலக்குகளையும் பூர்த்தி செய்து வெற்றிகரமாக முக்கியமான நிதி இலக்குகளான பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் மற்றும் உங்களின் ஓய்வுக்கால திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற முடியும்.
வெற்றிகரமான நீண்ட கால முதலீட்டாளராக இருக்க, நீங்கள் சீராக முதலீடு செய்து வருவது மிக அவசியமாகும்.