சிறுசேமிப்பு வச்சிருங்கீகளா? இப்போ வட்டி கூடிச்சிருங்க…
10 சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்குரிய வட்டி 8 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தபால் நிலைய 3 ஆண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 6.9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகவும், 2 ஆண்டுகள் வைப்புத் தொகைக்கான வட்டி 6.8 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தபால் நிலைய ஓராண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 6.6 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகவும். 5 ஆண்டுகால வைப்புத் தொகைக்கான வட்டி 7 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு திட்டத் திட்டத்திற்கான வட்டி 7 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாகவும், கிசான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி 7.2 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அந்த பத்திரத்துக்கான முதிர்வு காலம் 120 மாதங்களில் இருந்து 115 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் (சுகன்யா சம்ருத்தி) சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருங்கால வைப்புத்திட்டம் (7.1 சதவீதம்) சேமிப்புக் கணக்கும் (4 சதவீதம்) ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.