நகைக்கடையில் இலவச கிப்டுக்கு ஆசைப்படுவரா நீங்கள்…?
நகை வாங்கும் தினத்தில் தங்கத்தின் விலை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அதிக சேதாரம், அதிக செய்கூலி இவற்றிலிருந்து திசைதிருப்பவே கிராமிற்கு ரூ.50, 100 விலைத்தள்ளுபடி, இலவச கிப்ட் ஆகியவை அளிக்கப்படுகின்றன. செய்கூலியை மேக்கிங் சார்ஜ், எம்சி என எந்தப் பெயரில் கூறினாலும் பணம் தர வேண்டிய வாடிக்கையாளர்களுக்கு அவசியமில்லை. முக்கியமாக சேதாரம் செலுத்தியபிறகு, செய்கூலி தர வேண்டிய அவசியமில்லை.
சேதாரத்தை வேஸ்டேஜ் மற்றும் விஏ என அழைக்கப்படுகிறது. ஒரே மாடல் நகைக்கு மார்க்கெட்டில் வெவ்வேறு சேதாரங்கள் கணக்கிடப்படுகிறது. சேதாரம் குறைவாக எங்கு மதிப்பிடப்படுகிறதோ, அங்கு வாங்கினால் உங்களுக்கு நஷ்டமாகாது. நீங்கள் வாங்கும் தங்கத்தின் பணத்திற்கு எந்த கடையில் அதிகபட்ச தங்கம் கிடைக்கிறது என்பதை அறிந்து நகை வாங்க வேண்டும்.