Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பெண் தொழில் முனைவோர்களுக்கான சங்கம்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பெண் தொழில் முனைவோர்களுக்கான சங்கம்

தொழில்முனைவில் ஒரு சில பெண்களால் மட்டுமே பெரிய நிறுவனங்களை நடத்த முடிகிறது. பெரும்பாலும் சிறுதொழில்களையே பெண்கள் தொடங்கி நடத்தி வருவதை கண்டறிந்த பாரதிதாசன் பல்கலைகழகத்தின், பொருளியல் மற்றும் மகளிரியல் துறை சார்பில், மகளிர் தொழில் முனைவோர்களை ஒருங்கிணைப்பதற்காக தொடங்கப்பட்டதே தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT- WOMEN ENTREPRENEURS ASSOCIATION OF TAMILNADU).

சமுதாயத்தின் அடிமட்டத்தில் பல்வேறு திறமைகளையும், ஆளுமை பண்புகளையும் உள்ளடக்கிய பல பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டு அவர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் தகுந்த ஆலோசனைகளையும், ஆதரவினையும் அளித்து வருகிறது இச்சங்கம். பெண்களுக்கு சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதிட, பெண்களுக்கு பல்வேறு தொழில் சார்ந்த பயிற்சிகளை பல்வேறு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறது.

வங்கி கடனுதவிக்கு ஏற்பாடு செய்வதோடு, பல்வேறு தொழில்களுக்கு திட்ட அறிக்கை (Project Report) தயாரிக்க ஆலோசனை வழங்குகிறது மற்றும் தயாரித்தும் கொடுக்கிறது. அத்துடன் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானிய உதவி தொகை பெறுவதற்கு உதவிபுரிவதோடு, தொழில் ரீதியான ஆலோசனைக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

தொழில்களுக்கு தேவையான சான்றிதழ் பெறுதல் மற்றும் அரசின் தொழில் சார்ந்த சட்டதிட்டங்களை பின்பற்ற வழிகாட்டுவதோடு, இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் மூலப்பொருள்கள் கிடைக்கும் இடங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், தொழில் முனைவோர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தியும், சந்தைப்படுத்துதலுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் பணியினையும் இச்சங்கம் மேற்கொள்கிறது.

சென்னை, மதுரை, கோவை, சேலம், பாண்டிச்சேரி, கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் பல இடங்களில் கிளைகளை தொடங்கி வரும் இச்சங்கத்தின் மூலம் ஏராளமான பெண்கள் தொழில்முனைவோர்களாக பரிணமித்துள்ளனர்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

வீட் (WEAT) குறித்து ஒரு துண்டு பேப்பரில் தகவலறிந்த திலகவதி சங்கத்தை அணுகியுள்ளார். அவர்களின் வழிகாட்டுதல்படி SHE CARE என்ற பெயரில் நாப்கின் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கி கடந்த 12 ஆண்டுகளாக இவ்வியாபாரத்தை திறம்பட நடத்தி வருகிறார்கள். வீட் நடத்தும் மாதாந்திர கூட்டங்களில் கலந்து கொண்டு பெற்ற வழிகாட்டுதல்களின் மூலம் தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் பெற்று நாப்கின் விற்பனையை திறம்பட செய்து வருகிறார்.


இவர்கள் தயாரிக்கும் நாப்கின்கள் அனைத்தும் வெட்டிவேர், பஞ்சு போன்று முழுக்க முழுக்க இயற்கை பொருட்களை கொண்டும் Recycling செய்யக்கூடிய நாப்கின்களையே தயாரித்து கொடுக்கிறார்கள். மேலும் குழந்தைகளுக்கான Diaper, Herbal பொருளால் ஆனது. கொரானா பரவல் காலகட்டத்தில், கொரோனா பாதுகாப்புறை, Personal protect equipments போன்றவற்றை தமிழகம் முழுவதும் சப்ளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

DME தையல் படிப்பை முடித்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக தனது கணவர் வைத்திருக்கும் சலூனில் முடிவெட்டி கொண்டு இருக்கிறார் பெட்ரிஷியா மேரி. தொடக்கத்தில் ஆண்களுக்கு டை கலந்து கொடுக்கும் வேலையை செய்து வந்த மேரி, கணவன் செய்யும் முடி வெட்டும் வேலையை கவனித்து தானும் சிறுவர்களுக்கு செய்து அனுபவம் பெற்றுள்ளார்.

கணவன் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் ஒரு கையை இழந்ததால் முடிவெட்டும் வேலையை முழுநேர தொழிலாக செய்து வருகிறார். WEAT கொடுத்த ஊக்கமும், தன்னம்பிக்கையுமே இதற்கு காரணம் என்கிறார் பெட்ரிஷியா மேரி.

பெண்களுக்கு நேரடியாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று முடிதிருத்தம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் பெண் என்பதால் ஆண்கள் முடிவெட்டத் தயங்கினர். நாட்கள் செல்லச் செல்ல மேரியை ஏற்றுக் கொண்டு தற்போது ஆண்களும் முடிவெட்டிக் கொள்கின்றனர். பெண் தானே என்று சிலர் முடிவெட்ட குறைவான கட்டணம் தருவார்கள். அவர்களிடம், “ஆணோ, பெண்ணோ யார் முடிதிருத்தம் செய்தாலும் அதே கத்தி, அதே முகம், அதே காஸ்மெடிக் பொருள்.. பின் எதற்கு விலை வித்தியாசம்” என கேள்வி எழுப்பி புரிய வைக்கிறார் பெட்ரிஷியா…!
இவர்கள் போல் வீட் குறித்து தகவலறிந்து, அணுகி பயன் பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.