45 வயதிலேயே… ஓய்வுகாலத்திற்கு ஏற்ற அசத்தலான திட்டம்..
இன்றைய காலகட்டத்தில் டெக் நிறுவனங் களில் பணிபுரியும் பலரும் நினைப்பது, கொஞ்ச காலத்திற்கு பணிபுரிந்து விட்டு, பிறகு நிம்மதியாக சொந்த ஊரில் ஏதேனும் வணிகத்தினை செய்து வாழவே விரும்புகின்றனர்.
இதே தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஒரு கட்டத்திற்கு மேல், அரசு ஊழியர்களைப் போலவே மாத மாதம் பென்சன் கிடைப்பது போல வருமானம் கிடைத்தால் போதும் என நினைக்கிறார்கள். திட்டமிடல் அந்த வருமானத்தின் மூலம் குடும்ப பொறுப்புகளையும் தட்டிக் கழிக்காமல் நமக்கான வாழ்க்கையையும் நாம் மகிழ்ச்சியாக வாழ இந்த சேமிப்புகள் உதவ வேண்டும் என நினைக்கிறார்கள்.
இதற்காக இன்றைய காலக்கட்டத் தில் பலரும் முன் கூட்டியே திட்டமிடு கின்றனர். அந்த வகையில் குட் ரிட்டர்ன் ரீடர், ஒருவர் 45 வயதில் தங்களது ஓய்வு காலத்திற்கான சேமிப்பினை செய்து விட வேண்டும். தற்போது அவரின் வயது 25 வயது எனவும் கூறியுள்ளார்.
இளம் வயதில் சேமிப்பு இது குறித்து நிதி ஆலோசகர்களிடம் பேசிய போது, நிச்சயம் இளம் வயதில் சேமிப்பு என்பது, முதிர்வு கால வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிலும் எந்த அளவுக்கு இளம் வயதில் முதலீடு செய்ய தொடங்குகிறோமோ? அந்தளவுக்கு விரைவில் முதிர்வு காலத்திற்கு சேமிக்க முடியும். அதுவும் போதிய நிதியினை சேமிக்க முடியும். ஆக அப்படியிருக்கையில் 25 வயதில் தொடங்கி 45 வயதிற்குள் ஓய்வு பெறுவதற்கான திட்டம் என்பது, உங்களது கார்ப்பஸ் இலக்கினை அடைய உதவும். இது தான் பெஸ்ட் ஓய்வுகாலத்திற்கான முதலீடு என்பதால் ஓரளவு சராசரி வருமானம் கிடைக்கும், நல்ல வருமானம் தரும் திட்டங்களாக இருக்க வேண்டும். அதேபோல முதலீடுகளை தொடர்ந்து செய்ய வேண்டும் இடையில் நிறுத்தக் கூடாது. நீண்டகால முதலீடு, மிகப்பெரிய இலக்கு எனும்போது மியூச்சுவல் ஃபண்டுகளே சிறந்த ஆப்சன். இது தான் நீண்டகால நோக்கில் நல்ல லாபகரமான திட்டமாகும்.
பங்கு சந்தை அனுபவமிருக்கா? பங்கு சந்தையில் அனுபவமிருந்தால், இதில் உங்களால் முழுக் கவனம் செலுத்த முடியும் எனில், ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்யலாம். ஆனால் இதில் அனுபவம் இருந்தால் மட்டுமே இதனை பற்றி யோசிக்க வேண்டும். மற்றபடி பங்கு சந்தை பக்கம் போக கூடாது. குறிப்பாக மிக சிறிய வயதில் முதலீட்டினை செய்ய ஆரம்பிக்கிறீர்கள் எனில், அப்போது பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம்.
வயதானவர்கள் எதில் செய்யலாம்? இளம் வயதில் ரிஸ்க் எடுத்தாலும் நீண்டகாலம் இருப்பதால், அதனை ஈடுகட்டிக் கொள்ள முடியும். இதே வயதானவர்கள் கடன் சந்தை சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டை தேர்வு செய்யலாம். இதில் ரிஸ்க் இல்லா அரசு பத்திரங்களை தேர்வு செய்து முதலீடு செய்து கொள்ளலாம்.