Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கேலாவிருத்தி..! வாழை கன்று உற்பத்தியில் கூடுதல் லாபம் தரும் புதிய தொழில்நுட்பம்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

கேலாவிருத்தி..! வாழை கன்று உற்பத்தியில் கூடுதல் லாபம் தரும்
புதிய தொழில்நுட்பம்..!

உலக அளவில் வாழை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு இந்தியா. குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழகத்தில் டெல்டா பகுதியில் விளையும் வாழைகளுக்கு வெளிநாடுகளிலும் பெரிய மவுசு உள்ளது. இருப்பினும், தேவையான நேரத்திற்கு தண்ணீர் கிடைக்காமை, நோய் ஏற்படுதல், இயற்கை சீற்றங்கள் என தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்தும் வருகின்றன. இது போன்ற சூழ்நிலையில் இருந்து வாழை விவசாயத்தை காப்பாற்றவும், நவீன தொழில் நுட்பத்துடன் இணைந்து புது முயற்சிகளை மேற்கொண்டு, வாழை உற்பத்தியில் தொழில் முனைவோரை உருவாக்கும் வண்ணம் திருச்சி, தோகைமலை சாலையில், தேசீய வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது.

இம்மையம் சமீபத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் புதிதாக கேலாவிருத்தி என்ற வாழை உற்பத்தி முறையை கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம், ஒரு மூளைக்குருத்தியில் இருந்து 20-திற்கும் மேற்பட்ட ஒரே மாதிரியான வாழை கன்றுகளை குறுகிய கால இடைவெளியில் பெறமுடியும். இம்முறையை விவசாயிகளுக்கு பயிற்சியாகவும் வழங்குகின்றனர்.

பாக்கியராணி

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

திருச்சி, வியாழன் மேடு, பகுதி விவசாய பட்டதாரியான ஒண்டி முத்து: கேலாவிருத்தி முறையில் வாழை கன்று பெருக்கம் குறித்த பயிற்சி பெற்று வெற்றிகரமாக வாழை கன்று உற்பத்தி செய்து லாபம் ஈட்டி வருகிறார். கேலாவிருத்தி முறை குறித்து அவரிடம் நாம் பேசினோம்.

“தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் தான் நான் கேலாவிருத்தி பயிற்சி பெற்றேன். நோய் தாக்கம் இல்லாதவாறு நன்கு சுத்தம் செய்யப்பட்ட, சிறந்த வாழை முளை குருத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பாலீதின் பைகளை கம்பிகளின் உதவியுடன் குடில் போன்று 6 அடி உயரத்திற்கு அமைக்க வேண்டும். இக்குடில் நிழலில் தான் இருக்க வேண்டும்.

கார்த்திக்

செங்கல் அல்லது ஹாலோபிளாக் கற்களை கொண்டு தேவையான அகலத்தில் பாத்தி அமைத்து மண்புழு உரம், மக்கிய தொழு உரம், இயற்கையாக உருவாக்கப்படும் தென்னை நார் உரம், மண் உள்ளிட்டவைகளை கலவையாக கலந்து அந்த பாத்தியில் கொட்ட வேண்டும். பின்னர், வாழைக் குருத்துகளை கத்தியைக் கொண்டு 8 முதல் 10 கீரல்களாக அதன் மேல்பகுதியில் சேதத்தை ஏற்படுத்தி நடவேண்டும். சாதாரணமாக ஒரு முளை குருத்தில் இருந்து 5 கன்றுகள் வரும், ஆனால், இம்முறையில் 20 கன்றுகள் வரை வருகின்றன.

3

இதற்கான கால அளவு 90 நாட்கள் வரை பிடிக்கும். ஒரு வாழை குருத்தை ரூ.20திற்கு வாங்கி, அதன் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு வாழை குருத்தையும் ரூ.20திற்கு விற்பனை செய்து வருகிறேன். 20 குருத்துகளும் நோய் தாக்காமல் ஒன்று போலவே உள்ளதால், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கிட்டத்தட்ட 15 மடங்கு லாபத்தை இந்த உற்பத்தி முறையின் மூலம் பெறுகிறேன். குடில் அமைப்பதற்கான முழு தொகையையும் மானியமாக நபார்டு வங்கி கொடுத்து, குடில் அமைத்துக் கொடுத்தனர். என்னுடைய குடில் 10 அடி அகலமும், 20 அடி நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 4000 வரையில் வாழை குருத்துகள் பெற முடியும்.

உமா

விவசாயிகளிடம் இருந்து உள்ள வரவேற்பை பார்க்கும் போது கேட்பவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு நான் இன்னும் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அதே போல் கேலாவிருத்தி முறையில் கன்று உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு கற்றுத்தரவும் ஆர்வமான உள்ளேன்” என்றார்.
இது குறித்து வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி பாக்கியராணியிடம் பேசுகையில், பொதுவாக, கற்பூரவல்லி, மொந்தை உள்ளிட்ட வாழை ரகங்கள் 1000 வேண்டும் என்றால், சுமார் 500 குருத்துக்களில் இருந்து எடுக்க வேண்டும்.

அதில், எவ்வளவு நோய்வாய்ப்பட்டுள்ளது. உயரம் என்ன, எப்படி தன்மை கொண்டது என்பது தெரியாது. ஆனால், கேலாவிருத்தி முறையில் 40 முதல் 50 குருத்துகளே போதுமானது, இதனால், முறையாக தேர்வு செய்து பெற முடியும். 3 மாதத்தில் நல்ல குருத்துகளை பெற முடியும். இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், அனைத்து குருத்துகளின் தன்மையும் ஒன்று போலவே இருக்கும். உள்ளுரிலேயே கன்றுகளை எளிதாக விற்பனை செய்ய முடியும். சிறிதளவு இடம் இருந்தால் போதும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறமுடியும். கேலாவிருத்தி முறையில் விவசாயிகளுக்கு தேவையான வாழை கன்றுகளை அவர்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
வாழை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் உமா, இப்புதிய தொழில் நுட்பம் விவசாயிகளிடம் சென்று சேர பெருமளவு ஊக்குவித்து வருகிறார்.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் சுயஉதவி குழுக்கள் அமைத்து பயிற்சிக்கு அழைக்கின்றனர். அதிகமான விவசாயிகள் பயிற்சிக்காக விண்ணப்பிக்கும் பட்சத்தில் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறோம். நபார்டு வங்கி தற்போது 12 குடில்களை அமைக்க மானியம் கொடுத்துள்ளனர். அது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது” என்றார்.

நபார்டு வங்கியின் திருச்சி மாவட்ட மேம்பாட்டு மேலாளர் மோகன் கார்த்திக் பேசுகையில், விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நபார்டு வங்கி நிதி ஒதுக்கீடு செய்யும். அந்நிதியில் இருந்தே இந்த திட்டத்திக்கும் தொகை வழங்கப்படுகிறது. திருச்சியில் வாழை அதிகம் விளைச்சல் செய்யப்படும் தொட்டியம், முசிறி, மணச்சநல்லூர், புள்ளம்பாடி, லால்குடி, அந்தநல்லூர் உள்ளிட்ட 6 பிளாக்குளில் தலா 2 குடில்கள் வீதம் மொத்தம் 12 குடில்கள் இந்நிதியின் கீழ் அமைத்து தரப்படுகிறது. இதற்காக, கேலாவிருத்தி உற்பத்தி முறையில் பயிற்சி பெற்ற விவசாயிகளின் நிலத்தில் இடம் ஒதுக்கி கொடுத்தால், குடில்களை நாங்கள் அமைத்துக் கொடுத்து விடுவோம். ஒரு குடிலுக்கு ரூ.25 ஆயிரம் செலவாகும்.

ஒவ்வொரு குடிலுக்கும் குறைந்தது 20 விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம். அதற்கான செலவையும் நபார்ட்டே ஏற்கும். இரண்டு வருடத்தில் குறைந்தது 240 விவசாயிகளிடமாவது கேலாவிருத்தி முறையை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் நபார்டின் இலக்கு. இதற்காக ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
கேலாவிருத்தி முறை பயிற்சி பெற்ற விவசாயிகள் ரூ.25 ஆயிரம் முதலீடு செய்தால், ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறையும் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரையில் லாபம் பெற முடியும். தங்களுக்கு தேவையான வாழையையும் பெற்றுக் கொள்ள முடியும்.

ச.பாரத்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.