எலக்ட்ரிக் பைக்கை தொடர்ந்து எலக்ட்ரிக் சைக்கிள்!
பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை குறைக்க எலக்ட்ரிக் பைக் வந்தாச்சி. அடுத்து வந்துள்ளது எலக்ட்ரிக் சைக்கிள்.
இங்கிலாந்து நிறுவனமான கோசீரோ, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்கெல்லிங் புரோ (Skellig pro) சைக்கிள், ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கி.மீ வரை பயணம் செய்யலாம். 250W சக்தி கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ள இந்த சைக்கிளில் 7 ஸ்பீடு மைக்ரோஷிஃப்ட் கியர் மற்றும் இரட்டை வட்டு பிரேக் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.39,999 ஆகும்.
மற்றொரு எலக்ட்ரிக் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான நெக் மொபிலிட்டி (ரோட்லார்க் (ROADLARK) என்ற எலக்ட்ரிக் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ தூரம் பயணிக்கும் இந்த சைக்கிளின் பேட்டரி நீக்கப்பட்ட பிறகு அதை பெடல்கள் வழியாகவும் இயக்கலாம். இரட்டை பேட்டரி அமைப்பைக் கொண்ட இந்த சைக்கிளின் விலை ரூ.42,000 ஆகும்.
பெங்களூரைச் சேர்ந்த டவுட்ச் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஹெய்லியோ எம்-100(Hei-leom100) எலக்ட்ரிக் சைக்கிளின் விலை ரூ.49,900. ஆனால் இந்த ஒரு முறை சார்ஜ் பயண தூரம் 60 கி.மீ. மட்டுமே. 0.37kWh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளதோடு இவற்றை அப்கிரேடு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.