வீடியோ கால் மூலம் வில்லங்கம்…
பொது மக்கள் தங்களுடைய அலைபேசியில் வாட்ஸ்அப் செயலியில் தெரியாத எண்ணிலிருந்து வரும் வீடியோ அழைப்புக்களை ஏற்கும் போது, அந்த வீடியோ அழைப்பின் மூலம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து அல்லது அவர்களுடைய ஆபாச பதிவுடன் சேர்த்து இணைத்து, அத்தகைய படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிடுவோம் என மிரட்டி பணம் பறிக்கும் (வெளிமாநில அல்லது வெளிநாட்டு) கும்பல் இயங்கி வருகிறது.
இதனால் உழைத்து சம்பாதித்த பணத்தையும், சமூகத்தில் நன்மதிப்பையும் இழக்க நேரிடும். எனவே தெரியாத எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம். விபரீத்தில் சிக்க வேண்டாம்.