வர்த்தக டிப்ஸ்
- பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர்கள் கவனிக்க..! தமிழக பொதுப்பணித்துறையில் காண்ட்ராக்டர்கள் உரிமம் புதுப்பிக்க வரும் மார்ச் 31 வரை காலஅவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட்.!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 29-ம் தேதி கூட்டவும், பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- எல்ஐசி பாலிசிதாரர்கள் கவனிக்க..!
உங்களது எல்ஐசி பாலிசி காலாவதியாகிவிட்டதென விட்டுவிடாதீர்கள். காலாவதியான பாலிசியை புதுப்பிக்க மார்ச் 6-ம் தேதி வரை எல்ஐசி நிறுவனம் காலஅவகாசம் வழங்கியுள்ளது.
- கதர் வாரியத்தில் ப்ரான்சைஸி வாய்ப்பு..!
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் கதர் வாரிய பொருட்களை ப்ரான்சைஸ் முறையில் விற்பனை செய்ய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை வரும் 10.02.20201க்குள் அனுப்பலாம். இது குறித்த மேலும் விவரங்களை www.tnkvib.org (or) www.tenders.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
- சாலையோர வியாபாரிகளுக்கு ஓர் தகவல்..!
தமிழகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தில் இது வரை விண்ணப்பிக்கப்பட்ட 1.80 லட்சம் விண்ணப்பங்களில் 44,000 பேருக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 27,000 பேருக்கு மட்டுமே கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் விண்ணப்பித்த 6390 பேரில் 1426 பேருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு 974 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.