E20 பெட்ரோல் பயன்படுத்தலாமா..? கருத்து கேட்கும் மத்திய அரசு..!
எக்ஸ்.பி. 100 என்றழைக்கப்படும் ஆக்டேன் 100 என்னும் உலகத் தரம் வாய்ந்த புதிய வகை பெட்ரோலினை சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து வாகன எரிபொருளாக பயன்படும் E20 என்னும் பெட்ரோலினை பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்துவது குறித்து பொது மக்களின் கருத்துக்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது. சுற்றுச்சூழல் மாசு குறைவதோடு எண்ணெய் இறக்குமதி செலவினை கட்டுப்படுத்தவும் உதவும் இந்த E20 பெட்ரோல் எரிபொருளுக்கு உகந்த வாகனங்களை உற்பத்தி செய்வதற்கும் இந்த கருத்துக் கேட்பு வழிவகை செய்வதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.