டிஜிடல் இந்தியா திட்டத்தின் 6 ஆண்டு கால நிறைவை கொண்டாடும் வகையில், தங்களது செயலியைப் பயன்படுத்தி மின்னணு பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளா்கள், மற்றும் வியாபாரிகளுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான கேஷ்பேக் சலுகையை அளிக்க பே-டிஎம் முடிவு செய்துள்ளது இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளது..
நாடு முழுவதும் 200 மாவட்டஙகளில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்த சலுகைத் திட்டம், தமிழகம், கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக டிஜிடல் இந்தியா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.