நாடு முழுவதும் அதிகரிக்கும் பிராணவாயு தேவையை நிறைவு செய்யும் முனைவாக ஆந்திராவைச் சேர்ந்த மெட்டெக் ஜோன் லிமிடெட் (ஏஎம்டிஇசட்) நிறுவனத்துடனான கூட்டாண்மை குறித்த அறிவிப்பை ஊபர் வெளியிட்டது.
வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படும் கொரோனா நோயாளிகளுக்கு பாதுகாப்பான முறையில் தினசரி ரூ 300/- முதல் ரூ 400/- என்ற குறைந்த கட்டணத்தில் ஏஎம்டிஇசட் பிராணவாயு செறிவூட்டிகளை வாடகைக்கு வழங்கும் பணியை ஊபர் செய்து வருகிறது.