2009 ஆம் ஆண்டு முதல் பிஎஃப்ஐ -இன் வங்கி கணக்குகளில் ரூ.30 கோடிக்கும் அதிகமான ரொக்க வைப்புத்தொகைகளுடன் ரூ.60 கோடிக்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 2010 முதல் ஆர்எஃப்ஐ-இன் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.58 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
பணமோசடி வழக்கு தொடர்பாக, தீவிரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உடன் தொடர்புடைய 23 வங்கிக் கணக்குகள் மற்றும் ரீஹப் இந்தியா பவுண்டேஷனுக்குச் சொந்தமான 10 வங்கிக் கணக்குகளையும் அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது.
இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான 23 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ. 59,12,051 முடக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரீஹப் இந்தியா பவுண்டேஷனுக்குச் சொந்தமான 10 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ. 9,50,030 , மொத்தம் ரூ. 68.62 லட்சம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.