ஊன்றுகோல்
ஊன்றுகோல்
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன. ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப்படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப்படுகிறது.
சுயநலம் உள்ள மனிதன் புறக்கணிக்கப்படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான். பொதுநல உணர்வை எந்த போதிமரத்தில் இருந்து நம் குழந்தைகள் பெற முடியும்?
தாத்தா பாட்டிகள்தான் அத்தகைய போதிமரங்கள். அப்படியான தாத்தா பாட்டிகளுடன் குழந்தைகள் பேசும் அனுபவ மொழி இந்த இதழிலும் இதோ…
“குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான் என்பது இப்போது புரிகிறதா?” என்கிறார் அண்ணாமலையுடன் பேரன் ஜோஹித் கிருஷ்ணா,
புதுவயல், காரைக்குடி
”என் அப்பாயி சொல்லும் அனுபவங்கள் எனக்கு நான்
சொல்லும் ரகசியங்கள் என் பாட்டி”
என்கிறார் லீமாரோஸ்
அவருடன் பேத்தி ஜானினா, சுப்பிரமணியபுரம், திருச்சிராப்பள்ளி