மதிப்பிழக்கும் காசோலைகள்..!
வங்கிகள் இணைப்பு காரணமாக பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட சிறிய, நலிந்த வங்கிகளான தீனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி ஆகிய வங்கிகளின் காசோலைகள் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு இதில் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் நீங்கள் வேறு காசோலை மற்றும் பாஸ்புக் கேட்டு பெற வேண்டும். இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகளை இனி யாரிடமும் பெற வேண்டாம். அவை செல்லாது. ஏற்கனவே வாங்கி இருந்தால் அதை மாற்றிப் பெற்றுக் கொள்ளுங்கள்.