பட்ஜெட்டை வரவேற்கும் டிடிட்சியா!
பட்ஜெட்டை வரவேற்கும் டிடிட்சியா!
திருச்சிராப்பள்ளி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் முகில் பே.ராஜப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை 01.02.2023 மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்யதார்கள். இதில் மூடப்பட்ட சிறுகுறு நிறுவனங்களுக்கு மறு சீரமைப்பு செய்திட ஓர் நிதி அமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் உதவிட உள்ளதாக அறிவித்ததை வரவேற்கிறோம்.
பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்கள் திறன்படுத்தப்படுவர். பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும்.
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கும் வகையில் 9000 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறோம்.
சிறு, குறு நிறுவனங்களுக்கான வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்வு. அதற்கான வரி ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.