பொது இடங்களில் பயன்படுத்தும் கார்டுகளின் விவரங்கள் அதிக அளவில் களவாடப்படுகின்றன. நீங்கள் உங்களுடைய கிரெடிட் கார்டு குறித்த விவரங்களைக் கேட்ட இடங்களில் எல்லாம் தருகிறீர்கள் எனில், கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இல்லை என்று அர்த்தம்.
தவணைத்தொகை செலுத்துவதைத் தள்ளிப் போடும் பழக்கம் உங்களிடம் இருந்தால், கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்.
கிரெடிட் கார்டிலிருந்து எடுத்துப் பயன்படுத்தும் தொகைக்கு வட்டிவிகிதம் அதிகம். இது தெரியாமல் சிலர் அவசரப் பணத் தேவைக்காக கிரெடிட் கார்டிலிருந்து எடுத்துச் செலவு செய்கிறார்கள். பொருள்களையும், சில சேவைகளையும் வாங்கத்தான் கிரெடிட் கார்டினைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, பணம் எடுக்க அல்ல!
வருமானத்துக்கேற்ப நீங்கள் இவ்வளவு செலவு செய்யலாம் என உங்களுக்கு ஒரு லிமிட் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். லிமிட்டை தாண்டி முழுவதையும் பயன்படுத்தும்போது, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். அதுமட்டு மல்லாமல், நீங்கள் வாங்கிய கடனை சரியாகத் திரும்பக் கட்டமுடியாமல் போகவும் வாய்ப்புண்டு.
கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யும் செலவுகளுக்கு ரிவார்டு பாயின்டுகளை வழங்குவது வங்கிகளின் வழக்கம். அந்த ரிவார்டு பாயின்டுகளைப் பெறுவதற்காகவே பலர் அதைப் பயன்படுத்துகிறார்கள்.
அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கில்லை.
ரிவார்டு பாயின்டுகள் வழங்குவது கிரெடிட் கார்டினை அதிகம் பயன்படுத்த வைக்கவே தவிர, சலுகைகள் வழங்க அல்ல!