யாரும் பொறக்கும் போதே எதையும் கத்துட்டு வரல
நேற்று ஒரு கடையில் தேநீர் குடிக்க நானும் நண்பரும் போனோம். அங்க இருந்த பொண்ணு ரெண்டு டீ போட்டு கொடுத்துச்சு இவ்ளோ கேவளமான டீயை என் வாழ்கையில நான் குடிச்சதே இல்லை பொதுவாவே நான் டீ கடைக்காரன் சாயத்தை பார்த்தும், சர்க்கரை வாசத்தை வச்சும் டீ எப்படி இருக்கும்னு குடிக்காமலே சொல்லிடுவேன் டீ நல்லா இருக்கா அண்ணான்னு அந்த பொண்ணு கேட்டப்போ பரவால்லம்மான்னு சொல்லிட்டு வேகமா நகர்ந்தோம்.
புதுசா வேலைக்கு வந்துருக்கேன் அண்ணா குழந்தை இருக்கு குடும்ப கஷ்டம்னு சொல்லிட்டு இருக்கும் போதே குழந்தை தொட்டில்ல அழுதுட்டு இருந்துச்சு நம்ப தான் இரக்க மனம் உள்ள ஆள் ஆச்சே…
டீ சுத்தமா நல்லா இல்லம்மா இங்க வாங்கன்னு கடைக்கு உள்ள போய் டீ தூள் எவ்வளவு அளவு எடுத்து சாயம் இரக்கனும் பால், சர்க்கரை எப்படி சேர்க்கனும்னு சொல்லி நான் ஒரு டீ போட்டு கொடுத்தேன் அதை குடிச்சுட்டு டீ ரொம்ப சூப்பர் அண்ணான்னு அந்த பொண்ணு சொல்லுச்சு.
என் கண் முன்னாடியே ஒரு டீ போட சொல்லி மறுபடியும் குடிச்சு பார்க்க சொன்னேன் நல்லா இருக்குன்னு சொன்னாங்க.
யாரும் பொறக்கும் போதே எதையும் கத்துட்டு வரல நீங்க டீ போட கத்துக்காம இங்க நிற்க கூடாதும்மா கஷ்டமர் 10ரூ கொடுத்து தான் டீ குடிக்குறாங்க ஓசில குடிக்கலன்னு ரொம்ப அழகா காயப்படுத்தாம சொல்லிட்டு வந்துட்டேன்.
பின்குறிப்பு :
எங்க கடையில நான் டீ போட்டா கான்டாகி எங்கப்பா கத்த ஆரம்பிச்சுடுவாரு 😂😂😂 நீ வர Customerah துரத்தி விட்டுறாதன்னு 😂😂😂
– தங்க கோபிநாத்