குறு, சிறு நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்குள் நிலுவைத் தொகை
குறு, சிறு நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்குள் நிலுவைத் தொகை
குறு, சிறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை 45 நாள்களுக்குள் தனியார் பெரு நிறுவ னங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார் .
பெரு நிறுவன நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது : பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் சிறு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டண நிலுவையை பெரு நிறு வனங்கள் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் .
குறிப்பாக , அவற்றுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெரு நிறுவனங்கள் 45 நாள்களுக்குள் வழங்குவதோடு , நிறுவனப் பதி வாளரிடம் தாக்கல் செய்யப்படும் சிறு நிறுவனங்க ளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விவரங்கள் இடம்பெற்றிருக்கும் வரவு செலவுக் கணக்கு புத்தக விவரங்களையும் வழங்க வேண்டும்.
மத்திய அரசும் அதன் துறை கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் சார்பில் சிறு நிறுவ னங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை 90 நாள்களுக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது .