ELSS மியூச்சுவல் ஃபண்ட்..?
ELSS -ன் என்பதன் விரிவாக்கம் தான் Equity linked saving scheme. ELSS மியூச்சுவல் ஃபண்டுகள் வழி யாக திரட்டப் படும் பணத்தின் 80 சதவீதம், ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் தான் முதலீடு செய்வார்கள்.
இதில், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்து வருமான வரிக் கழிவு பெறலாம். இது 80 சி பிரிவின் கீழ் வருவதால், மற்ற எல்லா கழிவுகளுடன் சேர்த்து தான் ELSS திட்டத்தில் முதலீடு செய்து இருக்கும் பணமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் 3 வருட லாக் இன் இருப்பதும், 3 வருடத்துக்கு பிறகு இந்த மியூச்சுவல் ஃபண்டில் இருந்து ரூ.1 லட்சத்திற்கு மேல் கிடைக்கும் வருமானத்திற்கு மட்டும் 10 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும்