கொரோனா தொற்றால் கடந்த 6 மாதமாக நாட்டில் உற்பத்தி நின்று போனதால் ஏற்றுமதி குறைந்தது. பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து ஆயத்த ஆடைகள், இன்ஜினியரிங் பொருட்கள், பெட்ரோலியம் பொருட்கள், பார்மாசூட்டிகல்ஸ், தரை விரிப்புகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 5.27 சதவீதம் ஏற்றுமதி உயர்ந்து மொத்த வர்த்தகம் 2,740 கோடி டாலரை தொட்டுள்ளது.
அதே வேளையில் கடந்த ஆண்டு 3,769 கோடி டாலருக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது (2020 செப்டம்பர்) 3,031 கோடி டாலருக்கு மட்டுமே பொருட்கள் இறக்குமதியாகி உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.6 சதவீதம் சரிந்துள்ளது.
போக்குவரத்து சாதனங்கள், தங்கம், வெள்ளி, செய்தித்தாள், உள்ளிட்டவற்றின் இறக்குமதி வெகுவாகக் குறைந்துள்ளது.