நிதி நிர்வாகம் குடும்பத்தலைவிகள் அறிய வேண்டியது
வங்கியில் பணம் எடுப்பது, கடன் அணுகுமுறை, இன்சூரன்ஸ் எடுப்பது உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். வருமானத்தில் பட்ஜெட் போட தெரிந்து கொண்டு, தேவையற்ற செலவுகளை குறைக்க வழிவகை செய்ய வேண்டும். கணவருக்கு தெரியாமல் கடன் கொடுப்பது, நகைகளை அடகு வைத்து பணம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது.
உங்கள் குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கித் தருவதை பெருமையாக நினைக்காமல், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பணத்தை பற்றிய புரிதலை கற்றுத்தர வேண்டும். மேலும் முதலீடு, சொத்து, கடன் குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.