பெண் தொழில் முனைவோருக்கு திருச்சியில் இலவச பயிற்சி !
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் திருச்சி டிரெக்-ஸ்டெப் சார்பில் பசுமை தொழில் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண் தொழில் முனைவதற்கான மாதாந்திர பயிலரங்கு தொடர்.
இந்த தொடர் பயிலரங்கு ஒரு வருட காலத்திற்கு நடத்த திட்டமிட்டுள்ளது.
அக்டோபர் மாதம் வரும் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஜோசப் கல்லூரியில் நடைபெற உள்ளது.
பசுமை தொழில்களான, சணல் சார்ந்த இயற்கை வேளாண்மை மற்றும் ரசாயன பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து மகளிர் தொழில் முனைவோர் கலந்து கொள்ளலாம்.
பயிலரங்கில், தொழில் அடிப்படைகளை புரிதல், சந்தைப்படுத்துதல் திறன், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சந்தைப்படுத்துதல் மற்றும் லாபம் மதிப்பீடு போன்ற அம்சங்களை உள்ளடக்கி பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகத்திலிருந்து அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கலந்து கொள்ளலாம். கட்டணம் ஏதுமில்லை வெளியூர் பங்கேற்பாடுகளுக்கு பயண செலவு மற்றும் தங்கும் வசதி செய்யப்படும்.
மேலும் தங்கள் உற்பத்தி பொருட்களை கண்காட்சி படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிலரங்கு பயிற்சி தொடர்ந்து ஒவ்வொரு மாதம் நடத்தப்பட்டு பெண் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலில் நிலைத்து நீடித்து வெற்றிகரமாக செயல்பட அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
ஆர்வமுள்ள பெண்கள் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்க கைபேசி எண் 9488785806 மற்றும் 9994431117 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்க செயலாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்.