உள்ளூரில் மட்டும் அல்ல, வெளி நாடுகளிலும் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம் தான் இந்த குளோபல் மியூச்சுவல் ஃபண்ட். அதாவது இந்திய சந்தை மட்டும் அல்லாது, உலக சந்தைகளில் எது சிறந்தது என அலசி ஆராய்ந்து முதலீடு செய்வது தான் இந்த குளோபல் ஃபண்டுகள். இதில் ரிஸ்கும் குறைவு, லாபமும் அமோகம் என்று கூறுகிறார்கள் இத்துறை சார்ந்த நிபுணர்கள்.
ஆனால் எதை செய்தாலும் ஒரு நல்ல நிபுணரையும் கூட வைத்துக் கொண்டு, நீங்களும் அதனை பற்றி தெளிவாகக் தெரிந்து கொண்டு முதலீடு செய்வது மிக நல்லது. அது பங்கு சந்தை, மியூச்சுவல் சந்தை, ரியல் எஸ்டேட் என எதுவாக இருந்தாலும் சரி.
இந்த குளோபல் ஃபண்டுகள் பொதுவாக இந்திய சந்தைகளில் 65%மும், சர்வதேச சந்தையில் 35%மும் முதலீடு செய்யப்படுகின்றன. சில நேரங்களில் 50% இந்திய சந்தைகளிலும், 50% சர்வதேச சந்தையிலும் முதலீடு செய்யப்படுகின்றன.
இது மட்டும் அல்ல இன்னும் பல வகைகள் இந்த முதலீடுகள் செய்யப்படுகின்றன. குளோபல் ஃபண்டுகளை பொறுத்தவரைக்கும் முதலீட்டு வரிச்சலுகை எதுவும் கிடையாது. ஆனால் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு வருமானத்திற்கு வரிச்சலுகை உண்டு. பொதுவா இந்த மாதிரியான பங்குகளில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் எடுத்தா, அதாவது 1-2 ஆண்டுகளுக்குள் எடுத்து விட்டா? அதற்கு மூலதன ஆதாய வரி உண்டு.
பொதுவா பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் அதற்கு மாற்றாக இதுபோன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்வார்கள். இந்த குளோபல் ஃபண்டுகள் தங்கள் போர்ட்போலியோ முதலீட்டினை பலவகையாக முதலீடு செய்யும் நபர்களுக்கு மிக ஏற்றது என்பார்கள் நிபுணர்கள். ஏனெனில் இது இடர் மேலாண்மைக்கு உதவுகிறது.
அது மட்டும் அல்ல இதில் நீங்கள் அதிக லாபம் பெற முடியும். எல்லாவற்றையும் இது நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற ஒரு ஃபண்டாக உள்ளது.