அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம்
60 வயதை கடந்து ஓய்வு காலத்தில் பிள்ளைகளை எதிர்பார்க்காமல், ஓய்வு காலத்தினை சுகமாக கழிக்க விரும்பினால் உங்களுக்கு மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் தான் சிறந்த திட்டமாகும். வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதோடு மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த திட்டம் வந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை மக்கள் என அனைவருமே, அரசின் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இதில் நீங்கள் ரூ.1,000, ரூ.2,000, ரூ.5,000 என்ற முறையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் 18 வயது முதல் 60 வயது வரை இணைந்து கொள்ள முடியும். இதில் வரிச்சலுகை உண்டு.