சீனியர் சிட்டிசன்ஸ்க்கான சிறந்த முதலீடு திட்டங்கள்
இத்திட்டத்தில் சேர போஸ்ட் ஆபீஸ், முன்னணி வங்கிகளை அணுகலாம். முதியவர்களுக்கு அரசாங்க கேரண்டியுடன் உள்ள அற்புதமான திட்டமாகும். இதில் முதலீட்டை குறைந்தபட்சம் ரூ.1,000லிருந்து அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும் மேற்கொள்ளலாம். இதன் தற்போதைய வட்டி 7.40%. குறைந்தபட்சம் 5 ஆண்டும், தேவைப்பட்டால் அடுத்த 3 ஆண்டுகளும் நீடிக்கலாம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை இதன் வட்டி வழங்கப்படும். 60வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், 55 வயதுக்கு மேற்பட்ட ஒய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இதில் சேர்ந்து பயனடையலாம்.
வயவந்தனா யோஜனா திட்டம் :
சீனியர் சிட்டிசன்களுக்காக மத்திய அரசு அறிமுகம் செய்த திட்டம் தான் பிரதம மந்திரி வயவந்தனா யோஜனா. ஒரு நபர் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மொத்தமாக ஒரு தொகையை செலுத்திவிட்டு மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பென்ஷன் பெற்றுக் கொள்ளலாம். முதலீட்டுக்காலம் 10 ஆண்டுகள். 3 ஆண்டுகளுக்கு பிறகு கடன் வசதி உள்ளது. இதன் வட்டி 7.40%. எந்தவித ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கான சிறந்த திட்டம் இது.