நவம்பரில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1.04 லட்சம் கோடி ஏற்றம்..!
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1,03,491 கோடியாக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டு நவம்பரில் 1.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.04 லட்சம் கோடியாக ஏற்றம் கண்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.19,189 கோடியாகும். மாநில ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.25,540 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.51,992 கோடியாகும். இதில் செஸ் ரூ.8,242 கோடியாகும்.
கடந்த நவம்பர் மாதத்தில் இறக்குமதி பொருட்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது, உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைக்கும் வரிவருவாய் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்த வருவாயைவிட 0.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.