மெழுகுவர்த்தி மெஷின்: 700 ரூபாயில் தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. சிறிய மெஷினில் ஒரு மணி நேரத்தில் 55 மெழுகுவர்த்திகள் செய்யலாம். ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் பெரிய மெஷின் வாங்கலாம். இதில் 500 முதல் 1,000 மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம்.
பவுச் மெஷின்: 1 ரூபாய், 2 ரூபாய் என்று விற்பனை செய்யப்படும் ஊறுகாய், வாஷிங் பவுடர், எண்ணெய் போன்ற பொருட்களை சாஷே பாக்கெட்டுகளில் அடைத்துத் தரும் மெஷின் இது. விலை ஒரு லட்சம். 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கலாம்.
பாப் கார்ன் மெஷின்: விலை 70 ஆயிரம் ரூபாய். மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இந்த மெஷினை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தால், நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.
உங்களிடம் முதலீடு ரூ.2 லட்சம் இருந்தால்….
- திருப்பூரில் டிஷர்ட்டுகள் வாங்கி விற்கலாம்.
- கோவையில் வீட்டுத்தேவைக்கான பம்புகள் தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கமிஷன் அடிப்படையில் விற்கலாம்.
- சிறுமுகை(கோவை), இளம்பிள்ளை(சேலம்) சேலைகள் வாங்கி விற்பனை செய்யலாம்
- சீனாவின் அலிபாபா வலைதளத்தலிருந்து சிறிய, தற்சமயம் வெளிவந்துள்ள மின்னணுச் சாதனங்களை இறக்குமதி செய்து குறைந்தது இரண்டு மடங்காக விற்பனைசெய்யலாம்.
- மதுரை, இராஜபாளையத்தில் மொத்த விலையில் நைட்டி, உட்பாவாடைகள் வாங்கி விற்கலாம்.
- பண்ருட்டி, கோவா போன்ற இடங்களிலிருந்து முந்திரிபருப்பு வாங்கி விற்கலாம்
- இந்தி தெரிந்தால் மும்பையிலிருந்து ரெடிமேடு குழந்தைகள் ஆடைகள் வாங்கி விற்பனைசெய்யலாம்.
- அகமதாபாத்திலிருந்து நல்ல தரமான காட்டன் சட்டைகள் வாங்கி விற்பனைசெய்யலாம். இது போன்று பல வகைகளில் உங்கள் விருப்பத்திற்கேற்ப விற்பனை செய்து பொருளீட்டலாம்.