உங்கள் சான்றிதழ்களை டிஜி லாக்கரில் சேமித்து விட்டீர்களா..?
மத்திய அரசின் டிஜிட்டல் முயற்சிகளில் ஒன்றுதான் டிஜி லாக்கர். டிஜிட்டல் வடிவில் இதில் ஆவணங்களை சேமித்து வைக்கலாம். இந்த லாக்கர் கணக்கை திறக்க ஆதார் இருந்தாலே போதும். கம்ப்யூட்டர் மூலம் லீttஜீs://பீவீரீவீறீஷீநீளீமீக்ஷீ.ரீஷீஸ்.வீஸீ இணையதளத்தில் அணுகலாம்.
ஆதார் அடிப்படையில் செயல்படும் இந்த டிஜி லாக்கரை ஒரு முறை பாஸ்வேர்டு பயன்படுத்தி திறக்கலாம் என்பதால் பாதுகாப்புக்கு உத்தரவாதம்.
டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி. புத்தகம், ஆதார் ஆவணங்கள் என எல்லாமே டிஜிட்டல் வடிவில் டிஜி லாக்கர் மூலம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. வாகன சோதனையின் போது இவற்றை காண்பிக்கலாம். வாக்காளர் அட்டை, பள்ளி, பல்கலைக்கழக சான்றிதழ்கள், பான் கார்டு போன்றவற்றையும் இதில் சேமித்து வைக்கலாம்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “5.19 கோடி பேர் டிஜி லாக்கரில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர் என்றும், 722 அமைப்புகளில் இருந்து 426 கோடிக்கும் அதிகமான கோப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளது.