Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் டிசம்பர் 17,18,19 ஆகிய தேதிகளில் கட்டுமானத் துறை வர்த்தக  BUILDPRO EXPO 2021 கண்காட்சி !

திருச்சியில் டிசம்பர் 17,18,19 ஆகிய தேதிகளில் கட்டுமானத் துறை வர்த்தக  BUILDPRO EXPO 2021 கண்காட்சி !

உணவு, உடை, இருப்பிடம் என்று  மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான ஒன்றாக இருப்பது இருப்பிடம். இந்த இந்த இருப்பிடத்தை அமைப்பதற்கு முக்கிய பங்காற்றுவது கட்டுமானம். இதனால் கட்டுமானத் துறையும் அத்தியாவசிய துறைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இருப்பிடம் மட்டுமல்லாது தொழிற் சாலைகள் பள்ளிக்கூடங்கள் என்று எத்தனை எத்தனையோ வகையான கட்டுமான வகைகள் இருக்கின்றன. இத்தனை வகையான கட்டுமான பணிகள் இருப்பதால் மக்களிடம் சந்தேகங்களும் எண்ணில் அடங்காமல் இருக்கின்றன.

 

வீடியோ லிங்

இப்படி கட்டுமானத் துறை பற்றிய மக்கள் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் கட்டுமானத் துறையில் உள்ள பல்வேறு புதுமையான தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள CROC மண்டபத்தில் டிசம்பர் 17, 18, 19 ( நாளை முதல்) ஆகிய மூன்று நாட்களும்  ஹீலியோஸ் சார்பில் மக்களுக்கு பல்வேறு தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில்  BUILDPRO EXPO 2021  நடைபெறுகிறது.
வீடியோ லிங்
ஹீலியோஸ்  BUILDPRO EXPO 2021-யில்
கட்டிடக் கலைஞர்கள், வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்கள், செங்கற்கள், கதவு மற்றும் ஜன்னல்கள், மின்சாதன பொருட்கள்,  பர்னிச்சர் சாதனங்கள்,  ப்ளைவுட் மற்றும் ஸ்டீல் கூரை,  பாதுகாப்பு மற்றும் சூரியசக்தி, டைல்ஸ், கிரானைட்ஸ் மற்றும் மார்பிள்ஸ், தண்ணீர் உபகரணங்கள், நீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் பொருத்துதல் போன்ற பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த பொருட்கள் காட்சிப் படுத்தப் படுவதோடு சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் வகையிலும், கட்டுமானத் துறையில் உள்ள சலுகைகள், அரசின் திட்டங்கள்,  ஆழமான மற்றும் விரிவான மேம்பாடுகள், போக்குகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை பல்வேறு வகைகளில் இங்கு காணலாம்.
தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம் பங்கேற்று பயன்பெறுங்கள்..
தொடர்புக்கு.. 9384265548, 9791794805, 9944619434
Leave A Reply

Your email address will not be published.