ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எத்தனை லட்சம் எடுக்க வேண்டும்?
ஹெல்த் பாலிசி ஒருவர் தனக்கு மற்றும் தனது குடும்பத்துக்கு எத்தனை லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்பதை அறிவோம்.
“ஒருவர் இளம் வயதில் ரூ.3 லட்சத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். மேலும், இளம் வயதிலே உங்கள் ஆரோக்கியத்தின் காரணமாக க்ளெய்ம் செய்யும் வாய்ப்புகள் குறைவு. அதனால் ஆண்டுதோறும் கிடைக்கும் போனஸ் அல்லது ஒட்டுமொத்த போனஸை நீங்கள் அனுபவிக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது, உங்கள் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 10%& 50% வரை உயரும்.
இந்தியாவில் சராசரியாக ஒரு குடும்பத்துக்கு சுமார் ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறார்கள். இரண்டு பெரியவர்களுக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வரை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும்.
ஒரு தனிநபருக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் அளவுகோலாக, உங்கள் வருடாந்தர வருமானத்தில் குறைந்தது 50% இருக்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்கும்போது அது உங்கள் ஓர் ஆண்டு வருமானத்துக்கு ஈடாக ஒரு ஃப்ளோட்டர் பாலிசி யாகவும் எடுப்பது நல்லது. இதனுடன் சேர்த்து குறைந்த தொகையில் சூப்பர் டாப்அப் பாலிசியையும் சேர்த்து எடுப்பது மிக நல்லது. இந்த அளவுக்குக் குறைவாக கவரேஜ் இருந்தால், எதிர்பாராத வகையில் ஏற்படும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் போக வாய்ப்புண்டு.