எல்பிஜி மானியம் வங்கி கணக்கில் சேர்வதை அறிவது எப்படி?
சமையல் எரிவாயு விலை அதிகரித்து வந்த போது அதை பயன்படுத்தும் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுதை தடுக்க கொண்டு வரப்பட்டது தான் மானியம். மானியத்தில் அதிக முறைகேடுகள் நடப்பதாக கூறிய தற்போதைய அரசு மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் போடுவதாக உத்தரவாதம் அளித்தது.
தற்போது சிலிண்டருக்கு மானியம் வங்கிக் கணக்கில் ஏறுகிறதா என்று பெரும்பான்மை மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு பார்ப்பதே இல்லை. சிலரோ மானியம் வங்கிக் கணக்கில் ஏற்றப்படுவதே இல்லை என்றும் ஏறுகிறதா என தெரியவில்லை என்றும் பலரும் கூறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க மானியம் நம் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதை எப்படி கண்டறிவது என்பது தான் இங்கு கேள்வி.? அதை தான் இங்கு பார்க்கப் போகிறீர்கள்.
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் மட்டுமே இந்த மானிய பலன் அடையலாம். பொதுவாக வங்கிக் கணக்கை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அதனுடன் இணைத்திருப்பார்கள்.
மானியத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணைய தளமான https://cx.indianoil.in/-க்கு செல்லவும். அதில் Subsidy Related (PAHAL) என்ற பகுதியை தேர்வு செய்யவும்.
Subsidy Related (PAHAL) என்ற தேர்வுக்கு சென்று மானியம் கிடைக்கவில்லை என்ற தேர்வை க்ளிக் செய்யவும். பிறகு உங்கள் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் செல் எண்ணை உள்ளீடாக கொடுத்து மானியத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.