Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சிறு வணிகங்கள் தொடங்க விரும்புவோருக்கான யோசனைகள்!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சிறு வணிகங்கள் தொடங்க விரும்புவோருக்கான யோசனைகள்!

உங்களுக்கு ஏதேனும் சிறிய வணிகம் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என்றால் அத்தகைய திட்டமிடுதலை எவ்வாறு, எங்கு செய்ய வேண்டும் என்ற புரிதலுடன் கடின உழைப்பை செலுத்தினால் வெற்றி அடைவது நிச்சயம்.

எந்தவொரு சிறிய தொழில் தொடங்குவதற்கு முன்பும் சில அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முக்கிய முடிவுகளை மேற்கொள்வது அவசியமாகிறது. அத்தகைய அடிப்படை ஆராய்ச்சியின் முக்கியத்துவம் மற்றும் வழிமுறைகளை உங்களுக்கு உணர்த்துவதால், அதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் சந்தேகங்களை தீர்த்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் உதவுகிறது.

ஊருக்கேற்ற தொழில் துவக்குதல்

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

நீங்கள் தொழில் தொடங்கும் ஊரின் நிலவரத்தை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் உள்ள தொழிலை பற்றி சிந்திப்பதே உங்கள் வணிக திட்டத்தின் முதல் படியாகும். எந்த வகையான பொருட்களை விற்பனை செய்தால் உங்களது வணிக வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்ற யோசனையுடன் செயல்படுவது முக்கியம்.  வாடிக்கையாளர்கள் யார், அவர்களுக்கு என்னென்ன  பொருட்கள் அன்றாட வாழ்வில் தேவையுள்ளது என்பதை பற்றி சிந்தித்து அதற்கு ஏற்ற வகையில் வணிக திட்டங்களை உருவாக்குவது நல்லது.

திட்டங்கள் உருவாக்கல் 

உங்களது வணிக திட்டத்தை குறுகிய கால திட்டம் மற்றும் நெடுங்கால திட்டம் என இரண்டு வகையான வணிக திட்டத்தை உருவாக்கி அத்தகைய திட்டங்களை வெற்றி அடைவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு குறுகிய கால திட்டத்தின் குறிக்கோளும் நெடுங்கால திட்டத்தை மிக விரைவில் அடைவதற்கான நடவடிக்கையாக இருத்தல் அவசியம்.

இலக்குகளை  நிர்ணயித்தல்

நீங்கள் செய்யும் தொழில் உங்கள் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் உள்ள செயல்பாடுகளை செய்து வெற்றி அடையும்போது மிக அளவற்ற மகிழ்ச்சி அடைவீர்கள்.  மேலும் நீங்கள் நினைக்கக்கூடிய இலக்கு என்பது உங்களது சக்திக்கு உட்பட்ட அளவில் உள்ளதாகவும் நிதி நிலைமைக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.

நிதி சிக்கலின்றி தப்பித்தல்  

நீங்கள் ஆரம்பிக்கும் நேரத்திலேயே உங்களது முழு நிதியையும் முழுவதுமாக செலவிடாமல், தகுந்த திட்டமிடுதல் மூலம் சிறு சிறு பகுதிகளாக பிரித்து அதற்கேற்ற வகையில் செலவு செய்தால் பல்வேறு வகையான நிதி சிக்கலில் இருந்து தப்பிக்க முடியும். வணிகத்திற்கான செலவு செய்தால் மட்டுமே இலக்குகளை சரியான நேரத்தில் அடைய முடியும்.

உள்கட்டமைப்பு செய்தல் 

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

உங்கள் தொழிலுக்கு எந்த இடத்தில் ஒரு அலுவலகமோ அல்லது கடையை நிறுவினால் வளர்ச்சி அடையும் என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் உங்களது நிறுவனத்தின் உள்கட்டமைப்பு செய்தல் அவசியம். வாடிக்கையாளருடன் நேரடி தொடர்பு இல்லாத தொழில்களை செய்வீர் களானால் கடை அல்லது அலுவலக உள் கட்ட மைப்பு செலவை குறைத்துக் கொள்வது முக்கியமாகும்.

வங்கி கடன் பெறுதல்

உங்களது வணிக திட்டத்தை முழுவதுமாக சமர்ப்பித்து வங்கியிலும் அரசாங்க அலுவலகங்களிலும் பல்வேறு விதமான கடன் உதவிகளை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அரசாங்கம் மட்டுமல்லாது சில தனியார் நிறுவனங்களும் தொழில் வளர்ச்சிக்கான கடன்களை வழங்குகின்றது.

கூட்டு தொழிலாக செய்ய விரும்பினால் முடிவெடுக்கும் ஆதாரங்களை பற்றிய ஆவணங்களை தகுந்த முறையில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

உரிமங்களைப் பெறுதல்

உங்களது தொழில் மூலம் கிடைக்கக்கூடிய லாபம் மற்றும் செலவுக் கணக்குகளை ஆண்டறிக்கை மூலமாக அரசாங்கத்திற்கு கொடுப்பதன் மூலம் வருவாய் துறை சலுகைகளை பெற முடியும். உங்கள் நிறுவனத்திற்கான சரியான வணிக உரிமங்களைப் பெற்ற கணக்குகளை சமர்ப்பித்தல் மூலம் உங்களது இலக்குகளை எந்த விதத்தில் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்பதும் புலப்படும்.

விலையை நிர்ணயித்தல் 

உங்களது விற்பனை பொருளுக்கான விலை நிர்ணயத்தை அமைத்தால் மட்டுமே சரியானதொரு லாபத்தை அடைந்து உங்களது தொழி லை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். எந்த ஒரு தொழிலை செய்தாலும் அதன் விற்பனைக்கு தகுந்த விலை நிர்ணயத்தை ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே செய்வதால் பிற்காலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்கக் கூடும்.

பிராண்டை  பிரபலப்படுத்துவது 

ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்தாலே ஒரு சில நிறுவனங்களின் பிராண்ட் நமக்கு கண் முன்னே வந்து செல்லும் அளவிற்கு தங்களது பிராண்டை மக்கள் மனதில் ஆழமாக பதித்து உள்ளனர். உங்களு டைய வணிகத்தின் பிராண்டை மக்க ளிடத்தில் பிரபலப்படுத்தும்போது நீங்களும் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். இதற்கான மார்க்கெட்டிங் உத்திகள் பலவற்றை நீங்கள் செய்வதற்கு மிகப் பெரிய தொகையை செலவிட நேரிடும்.

பெரும்பாலான மக்கள் தங்களது ஆரம்ப காலத்தில் எடுக்கக் கூடிய தொழில் முயற்சியில் பெரிய தோல்விகளை சந்திப்பதற்கு சரியான அணுகுமுறையில் வியாபாரத்தை நடத்தி செல்ல முடியாமல் இருப்பதே காரணமாகும்.

எந்த ஒரு தொழில் தொடங்குவரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொழில் தொடங்கினாலும் சில நேரங்களில் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போவதற்கு பலதடைகள் இருக்கக்கூடும்.   அத்தகைய தடைகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று, பல வணிக திட்டங்களை வகுத்து செயலாற்றும்போது வெற்றி அடைவது உறுதி

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.