சமோசா விற்பனையில் மாசம் ரு.12 லட்சம் அள்ளும் தம்பதி!
சமோசா விற்பனையில் மாசம் ரு.12 லட்சம் அள்ளும் தம்பதி!
பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட தம்பதிதான் சிக்ஹார் வீர்சிங் – நிதி சிங். இவர்கள் இருவரும் ஹரியானாவில் பிடெக்., பயாலஜி படித்தபோது நண்பர்களாக பழகினர். நாளடைவில் அது காதலாக மாறி திருமண பந்தத்திற்குள் நுழைந்தனர். தொடர்ந்து எம்டெக் படிப்பை முடித்த சிக்ஹார் வீர் சிங்கிற்கு பெங்களுருவில் உள்ள பயோகான் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக வேலை கிடைத்தது. இதையடுத்து மனைவி நிதி சிங்கை குருகிராமில் இருந்து பெங்களூருக்கு அழைத்து வந்தார். இதனால் நிதி சிங் மாதம் ரூ.2.5 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த தனியார் மருந்து கம்பெனி வேலையை கைவிட நேர்ந்தது.
இதையடுத்து தம்பதி இருவரும் சொந்தமாக தொழில் துவங்க முடிவெடுத்தனர். இதற்காக தாங்கள் வசித்து வந்த வீட்டை ரூ.80 லட்சத்துக்கு விற்றனர். அந்த தொகையை முதலீடாகக் கொண்டு சமோசா கடை திறக்க திட்டமிட்டனர். இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் சமோசா அதிகளவில் இருந்ததால் அதையே அவர்கள் தொழிலாக மாற்றினர்.
அதன்படி கடந்த 2016ம் ஆண்டு பெங்களுருவில் ஐடி நிறுவனங்கள் நிறைந்த எலக்ட்ரானிக் சிட்டியில் “சமோசா சிங்“ என்ற பெயரில் கடையை திறந்தனர். அதில் இவர்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல வருமானம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 6 மாதங்களில் ஒயிட் பீல்ட், மாரத்தஹல்லி, சர்ஜாபூர், இந்திரா நகர், எம்ஜி சாலை உள்ளிட்ட 12 இடங்களில் சமோசா கடைகளை திறந்தனர். வெஜ் சமோசா, கடாய் பனீர் சமோசா, பட்டர் சிக்கன் சமோசா என விதவிதமான சமோசாக்களை விற்று லாபத்துடன் விற்பனையை பெருக்கினர்.
இதனால் பெங்களுருவை தாண்டி 60க்கும் மேற்பட்ட கடைகளாக விரிவடைந்தது. இந்த கடைகளில் ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமோசாக்கள் விற்பனை செய்யப்படுகிறதாம். இதன் மூலம் இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.45 கோடி வருமானம் வருகிறது.
அதாவது ஒருநாளைக்கு சமோசா விற்பதன் மூலம் ரூ.12 லட்சம் சம்பாதிக்கிறார்கள். மேலும் சமோசா வியாபாரத்தை வெளிநாடுகளிலும் விரிவுப்படுத்த இருப்பதாக சிக்ஹார் வீர் சிங் தெரிவித்திருக்கிறார். நல்லா சம்பாதிக்கனுமுனு நெனச்சா சமோசா விற்கக்கூட தயங்கக் கூடாது.