ஆடு, கோழி வளர்ப்பில் கொட்டும் வருமானம்..!
Agrotech Integrated Farmer Producer Company Limited என்ற பெயரில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.
கிராமப்புற மகளிரை பொரு ளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தில் அவர்களை குழுவாக ஒருங்கிணைத்து ஆடு, கோழி வளர்க்கும் திட்டத்தை இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்திற்கு வலு சேர்த்துள்ளது.
நிலமற்ற விவசாயிகளை கண்டறிந்து அவர்களிடம் இலவசமாக ஆடுகள், நாட்டு கோழி வளர்ப்பு, நாட்டு கோழி முட்டை மற்றும் நாட்டு மாட்டு சாணத்தில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளித்து அதனை சந்தைப்படுத்தி வருமானத்திற்கு வழிவகுக்கின்றனர். விலையில்லா ஆடுகள் மற்றும் நாட்டு கோழி குஞ்சுகள் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், அவற்றிற்கு மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் அக்ரோ டெக் நிறுவனம் பார்த்து கொள்கிறது.
ஆடு வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தில் முதலீடு செய்து பொதுமக்களும் லாபம் பெறலாம் என்பது தான் இத்திட்டத்தின் தனிச்சிறப்பு.