தொழில் தொடங்க மானியம் அதிகரிப்பு
“சிறு மற்றும் குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான கல்வித்தகுதி தற்போது குறைக்கப்பட்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் பயனடையும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை தொழில் முனைவோர் பிளஸ் 2 படித்து இருந்தாலே போதும், பொதுபிரிவினராக இருப்பின் 20 வயது முதல் 35 வயது வரை உள்ளவராகவும். தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளாக இருப்பின் 21 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தொழில் தொடங்குவதற்கான திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் 10 லட்சம் முதல் 5 கோடி வரை இருக்க லாம் என்றும் இதற்கு நிலையான மூலதனத்தில் 25 சதவீதம் முதல் அதிகபட்சம் 75 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருவதாகவும் இதில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மேலும் விவரங் களுக்கு மேலாளர் மாவட்ட தொழில் மையம் கலெக்டர் அலுவலகம் சாலை திருச்சி என்ற முகவரியிலும் அல்லது 0431-&2460331, 2460823, 8925534027 என்ற எண்கள் வழியாக தொடர்புகொண்டு விபரங்களை கேட்டு அறியலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.