வீடு கட்ட ரூ.50 லட்சம் லோன் வேண்டுமா..?
எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் வீடு கட்டுவதற்கென ரியால்டி கோல்ட் லோன் ஸ்கீம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. ரியால்டி கோல்ட் லோனின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா.?
ஒருவர் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை கடனை பெற முடியும். பாதுகாப்பிற்காக, தங்க ஆபரணங்களின் தரம் மற்றும் தரம் குறித்து முறையாகச் சரிபார்க்கப்படும். மொத்த கடன் மதிப்பில் 0.50% ப்ரோசசிங் ஃபீஸ் வசூலிக்கப்படும்.
ஒரு வருடத்திற்கு MCLR ஐ விட 0.30 சதவீதம் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். 18 வயது பூர்த்தி அடைந்த நபர் இந்த கடனை பெற தகுதியுள்ளவர். ஆனால் எஸ்.பி.ஐ. வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்படும்.
36 மாதங்களில் இ.எம்.ஐ. நகைக் கடனை திருப்பி செலுத்த வேண்டும். அதே போன்று லிக்விட் கோல்ட் லோனை 36 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும். புல்லெட் ரீபேமெண்ட் கோல்ட் லோனை 12 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும். ரியல்ட்டி கோல்ட் லோனின் அனைத்து வகைகளுக்கும் வட்டியானது ஒரு வருட MCLR க்கு 7 சதவீதம், ஒரு வருட MCLR க்கு 0.30 சதவீதம் மற்றும் பயனுள்ள வட்டி விகிதம் 7.30 சதவீதம் என்று எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது.