கோடை விடுமுறையால் மக்களின் ரயில் பயணம் அதிகரிப்பு:
பிரீமியம் தட்கல் நடைமுறையை துவங்கி தெற்கு ரயில்வே அதிரடி!
கொரானா பாதிப்பிற்கு முன்பு, தெற்கு ரயில்வே 292 விரைவு ரயில்கள், 487 சாதாரண கட்டண பயணிகள் ரயில்கள், 453 புறநகர் ரயில்கள் இயக்கி வந்தது. நடப்பு 2022-23 நிதியாண்டு மீண்டும் வழக்கம் போல ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி தந்தது. இதனையடுத்து தெற்கு ரயில்வே பெரும்பாலான விரைவு மற்றும் புறநகர் ரயில்களையும், குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் ரயில்களையும் இயக்க துவங்கியது.
மீண்டும் ரயில்கள் இயக்க துவங்கிய போது, அனைத்து விரைவு ரயில்கள் முன்பதிவிலும் தட்கல் நடைமுறையை அமல்படுத்தியது.
ஆனால் பிரீமியம் தட்கல் என்ற கூடுதல் கட்டண தட்கல் நடைமுறை பல ரயில்களில் இருந்து வந்ததை மீண்டும் தொடராமல் இருந்தது. கோடை விடுமுறை மற்றும் கொரான தாக்கம் இல்லாமல் இருப்பதால் மக்கள் அதிக ரயில் பயணம் செய்ய துவங்கி விட்டனர். இதனால் பல முக்கிய ரயில்களில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியல்கள், அனுமதிக்கப்பட்ட அளவு எண்ணிக்கையை கடந்து முன்பதிவு நிறுத்தும் அளவிற்கு சென்று விட்டது.
இதனால் தெற்கு ரயில்வே சென்னை- கண்ணியாக்குமரி , அனந்தபுரி, முத்துநகர், சென்னை- ராமேஸ்வரம், மயிலாடுதுறை- மைசூர், காரைக்கால் – எர்ணக்குளம், ராக்போட் விரைவு ரயில்களில் மீண்டும் பிரீமியம் தட்கல் முறையை நடப்பு மே மாதம் முதல் படிப்படியாக அமுல்படுத்தி இருக்கிறது. இதனால் தெற்கு ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்க துவங்கி இருக்கிறது.
இது குறித்து ஒய்வு பெற்ற ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி மனோகரன் கூறியது : விரைவு ரயில்களில் உள்ள மொத்த முன்பதிவு படுக்கைகளில் அதிகபட்சம் 30 சதவீதம் வரை தட்கலுக்கு ஒதுக்கப்படும். அதில் 30 முதல் 50 சதவீதம் வரை பிரீமியம் தட்கலுக்கு உள் ஒதுக்கீடாக செய்யப்படும். பயணிகள் தேவையை பொருத்து இந்த சதவீதம் நிர்ணயிக்கப்படுகிறது.
தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு துவங்கியவுடன் வழங்கப்படும் பயணச்சீட்டுகள் தட்கல் கட்டணத்திலும், அது விற்று தீர்ந்தபிறகு பிரீமியம் ஒதுக்கீடு பயணச்சீட்டுகள், கூடுதலான பிரிமியம் கட்டணத்தில் வழங்கப்படுகிறது. பயணிகள் பிரீமியம் பயணச்சீட்டாக கோரினால் மட்டுமே அது வழங்கப்படும். இல்லையெனில் தட்கல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படும். ரயில்வேத்துறை குனிரசாதன முன்பதிவு காலை 10 மணி, இரண்டாம் வகுப்பு தட்கல் முன்பதிவு காலை 11 மணி என நேரம் ஒகுக்கியது போல், பிரீமியம் தட்கலுக்கு தனியாக குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும் என்பது பயணிகளிடம் எதிர்பார்ப்பாக நிலவி வருவதை ரயில்வே கவணத்தில் கொள்ள வேண்டும்.
– மன்னை மனோகரன்