சேமிப்புக்கு காப்பீடு பாலிசி…. சரியா?
சீரான முதலீடு என்கிறபோது, ரிஸ்க்கே எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு வங்கி மற்றும் தபால் அலுவலகத் தொடர் வைப்புத் திட்டமான ஆர்.டி கைகொடுக்கும். ஆர்.டி முதலீட்டை வங்கிகளில் ஆறு மாதம் தொடங்கி பல ஆண்டுகளுக்குத் தொடர முடியும். தபால் அலுவலக ஆர்.டி எனில், குறைந்தது ஐந்தாண்டுகளுக்குத் தொடர வேண்டும்.
சீரான முதலீடு என்று நினைத்து சிலர் எண்டோவ்மென்ட் மற்றும் யூலிப் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் முதலீடு செய்து வருகிறார்கள். ஆயுள் காப்பீடு மற்றும் முதலீடு கலந்த இந்த பாலிசிகள், காப்பீடு மற்றும் முதலீடு ஆகிய இரண்டில் எந்த ஒரு பலனையும் முழுமையாகத் தருவதில்லை. இது போன்ற காப்பீட்டு பாலிசிகளில் ஆயுள் காப்பீட்டு கவரேஜ் மிகவும் குறைவாக இருக்கும். மேலும், நீண்ட காலத்தில் இந்த பாலிசிகள் மூலம் கிடைக்கும் வருமானம் சுமார் 5 சதவிகிதமாகத்தான் இருக்கும். பணவீக்க விகிதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இதை நல்ல வருமானம் எனச் சொல்ல முடியாது. எனவே, குறைவான வருமானம் தரும் எண்டோவ்மென்ட் மற்றும் யூலிப் பாலிசிகளைத் தவிர்க்க வேண்டும்.