Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில்… சப்பாத்தி விலை ரூ.8… பூரி விலை ரூ.6 தான்…

திருச்சியில்… சப்பாத்தி விலை ரூ.8… பூரி விலை ரூ.6 தான்…

திருச்சியில் முதல் முறையாக குஜராத் மாடல் எந்திரம் மூலம் உடனடி சப்பாத்தி, பூரி தயாரிப்பு ஓய்வு பெற்ற இந்திய பாதுகாப்பு துறை அதிகாரியின் தொழில் முயற்சி!

உணவு மனிதனின் அடிப்படை தேவை. மக்கள் தொகை பெருக்கம், நேரமின்மை, வியாபார அபிவிருத்தி போன்ற நோக்கங்களால் உணவுத் துறையில் நவீன எந்திரங்களின் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. காபி மேக்கரில் தொடங்கி இட்லி, சப்பாத்தி, பூரி போன்றவை தயாரிப்பில் சமையல் எந்திரங்கள் கூடுதல் ஆதிக்கம் செலுத்துகின்றன.

தமிழகத்தில் கோவை போன்ற பகுதிகளில் சமையல் எந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் திருச்சியில் முதன் முறையாக குஜராத் மாநிலம் ராஜ்காட் பகுதியில் தயாராகும் அதிநவீன எந்திரம் மூலம் Ready to Eat என்ற வகையில் உடனடி சப்பாத்தி – பூரி தயாரிப்பு எந்திரம் மூலம் விற்பனையை தொடங்கியுள்ளார்.

இந்திய பாதுகாப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துரை மாணிக்கம் என்பவர். திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை IT PARK அருகில் அண்ணா நகரில் Queen Foods என்ற பெயரில் உடனடி சப்பாத்தி, ரொட்டி தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது.  இதுகுறித்து உரிமையாளர் துரைமாணிக்கம் கூறும் போது:

சுத்தமான, சுகாதாரமான உணவு வழங்குவது உணவு உற்பத்தி யாளர்களின் கடமையாகும். அதை முன்னிறுத்தி தரமான முறையில் திண்டுக்கல் Naga Atta பயன்படுத்தி சப்பாத்தி, பூரி தயாரிக்கின்றோம்.  கெமிக்கல்ஸ், சோடா உப்பு, அஜினா மோட்டோ போன்றவற்றை என்றுமே பயன்படுத்துவதில்லை என்று உறுதியாக இருக்கின்றோம்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் (FSSAI) சான்றிதழ் பெற்றுள்ளோம்.  அதிநவீன இயந்திரம் மூலம் 1 மணி நேரத்தில் 500 சப்பாத்திகள் வரை தயாரிக்க முடிவதால் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தாமதமில்லாமல் தர இயலும்.

உடனடியாக உண்ணும் வகையில் சப்பாத்தி ரூ.8க்கும், எண்ணையில் பொரித்து உண்ணும் வகையில் பூரி ரூ.6க்கும் விற்பனை செய்கிறோம். சூடு குறையாத பேங்கிங்கில் சில மணி நேரத்தில் உண்ணும் வகையிலும், ஹாட் பாக் கொண்டு வந்தால் சிறிது நேரத்தில் தேவைப்படும் அளவிற்கு சப்பாத்தி பெற்று செல்லலாம் என்றார்.

சப்பாத்தி பூரி தேவைப்படும் பொதுமக்கள், உணவு விடுதிகள், சமையல் காண்ட்ராக்டர்ஸ் 94425 12585 அல்லது 0431-&2583666 என்ற எண்ணில் அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.