பகுதி நேர பயிற்சியாளராக விருப்பமா?
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “விளையாட்டு இந்தியா” (Khelo India) திட்ட நிதியுதவியில் துவக்கநிலை மல்யுத்தம் பயிற்சிக்கான”SDAT”- விளையாட்டு இந்தியா மாவட்ட மையம்” திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் அமைக்கப்பட உள்ளது. இம்மையத்தில் விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனைப் படைத்த 40 வயதுக்குட்பட்ட முன்னாள் சாம்பியன் விளையாட்டு வீரர் / வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவும், தற்போதும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.18,000/- வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும்.