2021ல் முதலீடு : கவனிக்க வேண்டிய விஷயங்கள்
கடந்த சில வருடங்களில் கண்டது போல ஒரு வருடத்தில் 30 சதவீகிதத்துக்கும் மேல் தங்கம் விலை ஏற்றம் காண்பது போல் இந்த ஆண்டும் இருக்கும் என கணிப்பது தவறு. வருங்காலத்தில் தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்க வும் வாய்ப்புள்ளது. எனவே பிரித்து முதலீடு செய்தல் என்பதன் அடிப்படையில் இந்த ஆண்டு தங்கத்தில முதலீடு என்பது போர்ட்போலியோவில உள்ளது போல் 10 முதல் 15 சதவீதம் தொடரலாம்.
வீட்டுக் கடனுக்கான வட்டிக் குறைப்பு, வரிச் சலுகைகள், முறைப்படுத்தப்பட்ட துறைகளில் வருமான உயர்வு ஆகியவை நடுத்தர மதிப்பிலான வீடுகள் தேவை பரவலாக உருவாகி இருக்கிறது. எனவே ரியல் எஸ்டேட் துறையில் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் கணிசமான அளவில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.
பங்குச் சந்தைகளில் அடுத்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நிறுவனங்கள் அடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனவே பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை தொடரலாம்.
அதே வேளையில் நிறுவனங்களின் நிதிநிலை வளர்ச்சியின் அடிப்படையில் முடிவு களை எடுக்க வேண்டுமே தவிர ஏற்றத்தின் போக்கின் அடிப்படையில் வளர்ச்சியற்ற நிதிநிலை கொண்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.