மணிமார்க்கெட் பண்ட் தெரியுமா?
உங்கள் செல்போன் வழியே மியூச்சுவல் பண்ட் வாங்கும் முறையே ஐடிஎப்சி மணி மார்க்கெட் பண்ட் ஆகும். இம்முறையில் பெறப்படும் பணமானது அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்வார்கள். இதில் ரிஸ்க் மிகக் குறைவு. இதற்கு உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் முறையில், பணம் எடுத்துக் கொள்ள விண்ணப்பிக்கும் பண்ட் நிறுவனத்துக்கு அப்ளிகேஷன் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் பண்ட் வாங்கவும், விற்கவும் போலியோ எண்ணை அந்நிறுவனம் வழங்கும். இந்த எண்ணை வைத்து உங்கள் செல்போன் மூலம் ஐடிஎப்சி பண்டில் முதலீடு செய்யலாம்.
இம்முறையில் பண்ட் வாங்க ஐ.என்.வி. என டைப் செய்து நீங்கள் முதலீடு செய்யும் தொகையை டைப் செய்து 56767267 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். அதன் பின்னர் ஐடி நெம்பருடன், ஒதுக்கப்பட்டுள்ள யூனிட் அளவும் தெரிவித்து எஸ்.எம்.எஸ். வரும்.