டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு
PhonePe பயனாளர்கள் SIP திட்டம் மூலம் சிறிய தொகை மூலம் கூட தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில், ஒவ்வொரு பயனரும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை 24 காரட் தங்கத்தில் முதலீடு செய்யலாம். SIP திட்டத்தின் ஒரு முறை தங்கத்தில் முதலீடு செய்தால் மாதம் மாதம் தானாகவே முதலீடு செய்யப்படும்.
பயனாளர்கள் முதலீடு செய்த தங்கம் வங்கி லாக்கரில் பராமரிக்கப்படும், மேலும், தேவைப்படும் நேரத்தில் தங்கத்தை பணமாகவோ அல்லது தங்கத்தை வைத்து கடனோ பெற்று கொள்ளலாம் எனவும் PhonePe தெரிவித்துள்ளது. மேலும், வாங்கும் தங்கத்தை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.