பங்கு வர்த்தகம் சூதாட்டமா?
முதலீட்டாளர்கள் நேரடி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு நஷ்டத்தை சந்திப்பதாலேயே இத்தகைய கருத்து நிலவுகிறது. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. இந்த இடத்தில் தான் எங்களை போன்று (கேட்டமரைன் இன்வெஸ்ட்மென்ட்) நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் பணத்திற்கு பங்கம் வராமல் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து தருகிறோம். அதுவே மியூச்சுவல் பண்டு வர்த்தகம்.
மியூச்சுவல் பண்டு வர்த்தகம் போல் வேறு எந்த தொழிலும் இந்த அளவிற்கு அபரிதமான வளர்ச்சியை எட்டி இருக்காது. நான் 2004ல் இத்தொழிலில் கால் பதித்த போது, வங்கியின் டெபாசிட் தொகையில் 5 சதவீதத்திற்கு உள்ளாகவே மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் நிதியாக இருந்தது. ஆனால் இப்போது மொத்த டெபாசிட் தொகையில் சராசரியாக நான்கில் ஒரு பங்கு மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் தொகையாக உள்ளது.
ஆரம்பத்தில், “எஸ்.பி.ஐ. பரஸ்பர நிதி” கூட மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் பெரிதாக கவனம் கொள்ளவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் தான் அவர்கள் பெரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்போது இந்தியாவில் மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் முதலிடத்தில் இருப்பது எஸ்.பி.ஐ. தான். மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் மட்டுமே சுமார் 5 லட்சம் கோடியை கையாள்கிறார்கள். இரண்டாவது இடத்தில் ஹெச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் பண்டு உள்ளது.